கவிஞர் மகுடேசுவரன்
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!


கவிஞரின் பொன்விழாத் தொடக்க நிகழ்வு


கவிஞர் மகுடேசுவரனாரின் ஐம்பதாவது அகவை நாளில் அவர்தம் உலகளாவிய மாணவர்கள் ஒன்றுகூடி இணையவழிக் கூடுகையின் வாயிலாகத் தத்தம் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தனர்.
இந்தியா, சிங்கப்பூர், வடஅமெரிக்கா, கனடா, வளைகுடா நாடுகளில் வாழும் மாணவர்களின் வாழ்த்து மழையில் அகங்குளிர நனைந்து களித்தார்.
தனிச்சிறந்த ஆசிரியரிடம் தமிழ் மொழியைக் கசடற கற்றதைக் காட்டும் வண்ணமாக மாணவர்களின் வாழ்த்துகள் நயமிகு கவிதைகளாகவும் கலந்துரையாடல்களாகவும் இருந்தன, அவர்களுள் சிலர் மரபு பாப்புனைந்து ஆசிரியரை மகிழ்வித்தனர்.
மாணவர்களின் கட்டற்ற அன்பு இணையக்கரை புரண்டோடிற்று. மாணவர்களின் கவிதைகளில் எடுத்துக்காட்டாக சில இங்கே..
1.அறுசீர் விருத்தம்:
விதிகளை உரக்கக் கூறி
விளங்கிடச் செய்யும் ஆசான்!
கதியிலா திருந்தார் தமிழைக்
கற்றுயர் பெறவே வந்தார்!
மதியினால் மதிப்பு பெற்று
மாநிலம் போற்றும் படிநல்
பதிவுகள் நிறைவாய்த் தந்து
பதிந்திடச் செய்தார் மொழியை!
2. அறுசீர் விருத்தம்:
தாய்த்தமிழ்தம் மடியினில் தவழ்ந்ததனால்
தமிழர்யாம் என்றபோ தும்வழிகள்
வாய்த்திடினும் வளம்பொதி மொழியறிவை
வல்லதொரு குருவிடம் வளர்த்திடவே
பாய்ந்துவிழு மருவிபோல் பதங்குறையாப்
பாவலர்கண் செம்மொழி தமிழ்கற்றோம்
ஆய்ந்தாய்ந்து மொழியதன் ஆழமுணர்
அறிஞர்நல் மொழிமகு(ட) அரனிடமே
புகைப்படக் களஞ்சியம்








Poetry
Explore Tamil poetry, grammar, and literature here.
தொடர்புக்கு:
magudesuwaran.com
© 2025. All rights reserved.
Developed by AptechITServices